உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு... நீதிபதி கிருபாகரன் அதிரடி

By Thiraviaraj RMFirst Published Jan 7, 2019, 3:58 PM IST
Highlights

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வாறு மையங்களை திறக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதற்கு மாறாக, அந்த உத்தரவையும் மீறி பாரதியார் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிமாநிலங்களில் தொலைதூர கல்வி மையங்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மங்கத்ராம் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் அதாவது வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

click me!