திருச்சந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

Asianet News Tamil  
Published : Feb 26, 2017, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
திருச்சந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி

சுருக்கம்

Unless you are going to get into the first phase of the investigation found that tourists

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே 20 பேருடன் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு என்ற சுற்றுலா தளம் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள மீனவர்களின் படகில் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்றுள்ளனர்.

கடலுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதில் 4 பெண்கள் 2 சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கடலில் தத்தளித்த 2 சிறுமிகள் உள்பட 7 மீட்கப்பட்டு திருச்செந்தூர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து நடந்த பகுதியில் ஆங்காங்கே மணல் திட்டுகள் இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!