
மதுரை
மதுரையில், பத்தாம் வகுப்பு மாணவியை கற்பழித்து கர்பமாக்கிய பார்வையற்ற ஆசிரியரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்நசீர் (36). பார்வையற்றவர். இவர் பெருங்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். எட்டு வருடங்களுக்கு முன் இவர், வாசுகி என்ற கண் பார்வையற்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், பாம்பன் நகரில் இவர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமி, பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமி, பெருங்குடியில் உள்ள பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும்போது பிரேம்நசீரும் உடன் செல்வாராம். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இதனையடுத்து சிறுமியை விசாரித்தபோது ஆசிரியர் பிரேம்நசீர், கற்பழித்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப்பதிந்து ஆசிரியர் பிரேம்நசீரை கைது செய்தனர். அவரிடம் காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.