வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை தரகுறைவான வார்த்தையால் பேசி அவரை திட்டி கன்னத்தில் அறைந்துளார். மேலும் ஆத்திரம் தீராமல் செருப்பால் தலையில் அடித்து அவரை தாக்கியுள்ளார்.
வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக இளைஞரணி நிர்வாகி அபிலாஷ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் வங்கியுடன் இணைந்த ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பொறியாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தினை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அபிலாஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி உள்ளார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும் பணம் எடுக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
அதைப் மீறியும் ஏடிஎம் கார்டை உள்ளே புகுத்தி உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை தரகுறைவான வார்த்தையால் பேசி அவரை திட்டி கன்னத்தில் அறைந்துளார். மேலும் ஆத்திரம் தீராமல் செருப்பால் தலையில் அடித்து அவரை தாக்கியுள்ளார். உடனடியாக பணம் எடுக்க வெளியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவரை தடுத்தனர். இதனையடுத்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி அபிலாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். வங்கி உதவி மேலாளர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், பாஜக இளைஞரணி நிர்வாகி அபிலாஷ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தியது இப்படித்தான்! வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் ரகசியம்! என்ட்ரி கொடுக்கப்போகும் NIA!
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த அபிலாஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.