தமிழகத்தில் அதிசயம் நடந்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றி பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்
நாளை நாகூரில் நடைபெறும் திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இன்று விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகை தந்தார். திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அளவில் மீண்டும் பிரதமர் ஆவார். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாகதான் இருக்கும். அண்ணாமலை ஒரு குழந்தைத்தனமாக செயல்பட்டு வருகிறார். அரை மணி நேரம் மட்டுமே நடக்கிறார்.அப்படி இல்லை என்றால் கூட்டத்தில் சென்று அவரே நடுவில் நின்று கொள்கிறார்.” என சாடினார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறினார். ஆனால் பின் வாங்கினார். ஆனால் ரஜினி வேற, விஜய் வேற என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு அண்ணாமலை செய்ததாக குற்றம் சாட்டிய எஸ்.வி.சேகர், “அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி ஆனால் தமிழகத்தில் பாஜக 3சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மட்டுமே நாம் பார்க்க முடியும். அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.” என்றார்.
“தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரியாக எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை நடைபயணம் செய்வதால் எந்த பயனும் இல்லை எப்போதும் கூட்டம் வந்து ஓட்டாக மாறாது.” என எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் முதல் பாரத் அரசி விற்பனை: மத்திய அரசு நடவடிக்கை!
தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர், “அண்ணாமலை பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் யாரையும் மதித்ததில்லை. தமிழகம் திராவிட மண் என்றால் அவர்களோடு போய் கள நிலவரம் அறிந்து ( ground reality ) அதற்கு தகுந்தார் போல் பாஜக அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு நான் இந்த மண் அந்த மண் என்று பேசிக்கொள்ளக் கூடாது. ஏன் என் மண் என் மக்கள் - நம்மண், நம் மக்கள் என்று வைத்திருக்கலாமே.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அளவில் முயற்சி எடுக்கிறார். ஆனால் அவரது பெருமைகளை பேசாமல் அண்ணாமலை தனது பெருமையை பேசி வருகிறார். அண்ணாமலையை நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்றால் நான் 1990ல் இருந்து இந்த கட்சியில் இருக்கிறேன். மிகப்பெரிய அளவில் வளர்ந்த கட்சி சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய ஒரு கட்சியை அண்ணாமலை தமிழகத்தில் இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்லவில்லை.” என்றார்.
பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் கைது!
ராமர் கோயில் கும்பாபிஷேகம் என்பது ஏறத்தாழ 500 ஆண்டு கனவு. சட்டப்படி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கட்டப்பட்டது. அயோத்தியில் உள்ள முஸ்லிம்களே இந்த கோவிலை பெருமையாக கருதப்படக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
விஜயகாந்த் மிகவும் நல்லவர் ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவ்வளவு நல்லவராக இருக்கக் கூடாது. நேற்று விஜய் கட்சி துவங்கியதாக அறிவித்தபோது கூட நான் கூறினேன். சினிமாவில் கத்தி பிளேடுகளுடன் வருபவர் தவறானவர் என்று அடையாளம் காணலாம் ஆனால் அரசியல் நிஜ வாழ்க்கையில் கூடவே இருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்வார்கள் என எஸ்.வி.சேகர் கூறினார்.
ஸ்ரீரங்கம் கோயில் நடை சாத்தப்பட்டதால் நாளை மாலை வந்து அரங்கனை தரிசிக்க உள்ளதாக தெரிவித்த எஸ்.வி.ச்சேகர், கோயிலின் வெளியே சாஷ்டாகமாக விழுந்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து கடந்து சென்றார்.