
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ளது ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனு (எ) கிருஷ்ணகுமார் (48). இவர் மீது ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை மிரட்டல் மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் சீனுவை சினிமாவை மிஞ்சும் வகையில் ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.
இதையும் படிங்க: வழக்கறிஞர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! பழிக்கு பழியா? பகீர் கிளப்பும் தகவல்!
ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சீனிவாசனை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீனு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 42 வழக்குகள்! இரண்டு முறை குண்டர் சட்டம்! யார் இந்த படப்பை குணா? மிரள வைக்கும் க்ரைம் ரிப்போர்ட்!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறைச்சி கடை நடத்தி வரும் இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சீனு பாஜக ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். ரவுடி வயல்வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.