இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் கல்யாணராமன். இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வந்தார். இவரது பதிவுகள் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத விரோத மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கல்யாணராமன். அப்போது, இனிமேல் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட மாட்டேன் என்று பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தொடர்ந்து இஸ்லாமியர்களை அவதூறு செய்யும் வகையில் பதிவிட்டு வந்தார்.
SBI: உதவுவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் அபேஸ் செய்த ஸ்டேட் வங்கி ஊழியர்
இதனால் 2021ஆம் ஆண்டு அவர் மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கல்யாணராமன் மீது சைபர் க்ரைம் காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
விசாரணைகள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஏற்கெனவே 163 நாட்களையும் சிறையில் கழித்துவிட்டதால் அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
என் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படவுள்ளது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை.
— Kalyan Raman (@KalyaanBJP_)இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கல்யாணராமன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள கல்யாணராமன், "என் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படவுள்ளது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்! வண்ணம் பூசிய இளைஞரை தீ வைத்துக் கொல்ல முயற்சி!