விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !

By Raghupati R  |  First Published Aug 28, 2022, 7:14 PM IST

தமிழ்நாட்டில் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.


தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 5,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து, இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை அமைக்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜை நடத்தப்படும். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

அதன்பிறகு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து கரைக்கப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ள செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் இறைச்சிக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் மூடப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

click me!