தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த பிபோர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இதனால், கேரளா மற்றும் மகாராஷ்ராவில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த பிபோர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று, அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலும்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- அசுர வேகத்தில் வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்
இந்நிலையில், இந்த புயல் இன்று அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும். இதனால், கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும். புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- தினமும் 2500 லிட்டர் ஆவின் பால் திருட்டு! இது ஆட்சியாளர்களுக்கு தெரியாம நடந்திருக்க வாய்பே இல்லை! டிடிவி பகீர்
அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்பதால் அரபிக்கடல் மற்றும் வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் உள்ளவர்களும் அவசரமாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.