சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! அந்தரத்தில் பறந்த பைக்! ஓட்டியவரின் நிலைமை என்ன? அதிர்ச்சி வீடியோ!

Published : Mar 19, 2026, 12:56 PM IST
bike accident

சுருக்கம்

Dindigul Accident: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, அதிவேகமாக வந்த பைக் மற்றொரு பைக் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

திண்டுக்கல் மாவட்டம் நந்தம் சாணார்பட்டி அருகே கடந்த 16ம் தேதியன்று முன்னாள் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அதி வேகத்தில் இளைஞர் ஒட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சினிமா பாணியில் இளைஞர் சாலையில் உருண்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் அந்தரத்தில் பறந்து வீட்டின் சுவற்றின் மோதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மேட்டுக்கடையை சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பது தெரியவந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயின் அரசியல் ரூட் க்ளியர்.! தனி ஒருவனாக வருவேன்.! தளபதியின் முடிவுக்கு இதுதான் காரணம்.!
தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.