பைக் - கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் மரணம்; உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது நேர்ந்த சோகம்...

 
Published : Dec 29, 2017, 10:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
பைக் - கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் மரணம்; உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வரும்போது நேர்ந்த சோகம்...

சுருக்கம்

Bike - car accident youth dead in erode

ஈரோடு

ஈரோட்டில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொமரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (29). எம்.எட்.பட்டதாரியான இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அருண்யா (25) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது.

இந்த நிலையில், ராஜேந்திரன் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அருகே வேட்டுவன்புதூரில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில்  வீடு திரும்பி கொண்டிருந்தார்.

சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த காரும் எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், தூக்கி எறியப்பட்ட ராஜேந்திரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

இந்துகளுக்கு தீபம் ஏற்ற உரிமை இல்லையா..? தன்னையே மாய்த்து கொண்ட மதுரை இளைஞரின் விபரீத முடிவு..
தமிழகத்தில் 88 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!