சென்னை - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு வந்தே பாரத் விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இதுகுறித்த முழு விபரங்கள் வெளியாகி உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே கூடுதல் வந்தே பாரத் சேவையை தெற்கு ரயில்வே நவம்பர் 9ஆம் தேதி இயக்குகிறது.
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மீண்டும் எழும்பூருக்கு செல்லும். இது திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வழக்கமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கூடுதலாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி தீபாவளி சிறப்பு வந்தே பாரத் விரைவு ரயில் எண் 06067 சென்னை எழும்பூரில் இருந்து நவ.9ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
எண் 06068 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் தீபாவளி சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..