பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்…சிறந்த சப்-இன்ஸ்பெட்ராக தேர்வு!!

 
Published : Mar 22, 2018, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்…சிறந்த சப்-இன்ஸ்பெட்ராக தேர்வு!!

சுருக்கம்

best lady sub inspecter of police jayamanai

1500 பிரிந்து வாழ்ந்த தம்பதிகளை சட்டப் பூர்வமாக சேர்த்து வைத்தது, 15 அனாதைப் பிணங்களை அடக்கம் செய்தது போன்ற சேவைகளை செய்த பெண்  சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி சிறந்த சப்-இன்ஸ்பெட்ராக தேர்வு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜெயமணி . இவர் பிரிந்து வாழ்ந்த 1,500 தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளார்.

மேலும், தனது சொந்த செலவில் 15 அனாதை பிணங்களையும் அடக்கம் செய்துள்ளார். பெற்றோரால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளை தத்து எடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார்.   இந்நிலையில்  உலக மகளிர் தினத்தையொட்டி, இவர் சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி உள்ளார். மேலும் சென்னை போலீசில் தலைச்சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது சமூக சேவையை பாராட்டி, பல்வேறு சமூக அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இவரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இவரது கணவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருவதாகவும், தனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் என்றும்,  போலீஸ்வேலையில் சேர்ந்து 32 ஆண்டுகளாக  பணியாற்றி வருவதாக ஜெயமணி தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!