கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் புபேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

 
Published : Mar 22, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
கனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர் புபேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சுருக்கம்

Rs 824.15 crore cheating kanishk jewellery CBI officials investigate to Bhupesh Kumar

எஸ்.பி.ஐ. உள்ளிட்ட 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயினிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இயங்கும் கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை மீது ரூ.824.15 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது. கனிஷ்க் ஜூல்லரி நகைக்கடை மீது 16 பக்க குற்றச்சாட்டுகளை சிபிஐயிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய, கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் ரூ.824.15 கோடி கனிஷ்க் நிறுவனம் செலுத்தாமல் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் புபேஷ் ஜெயின், போலியான கணக்குகளை காட்டி வங்கியில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடைகளில் சோதனை நடத்தவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் புபேஷ் குமார் கைது செய்யப்பட்டார். சில வாரங்களில் ஜாமினில் வந்த அவர், தற்போது தலைமறைவாக இருந்த அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர். 

இந்த நிலையில், புபேஷ் குமார் பிடிக்கப்பட்டு சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் புபேஷ் குமாரின் மனைவி நீதா ஜெயினிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சாஸ்திரி பவன் சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!