
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி- திருவிழா
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா வருகிற 29ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இந்த திருவிழாவானது செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 29ம் தேதி அன்று மாலை 04.30 மணிக்கு கொடிதேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு. 3வது பிரதான சாலை, 7வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும். செப்டம்பர் 1ஆம் அன்று மாலை 04.30 மணிக்கு இளைஞர் ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 02.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு வேது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும் வரவுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
தொடர்ந்து 03.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு நற்கருணை ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும். 07.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு பிரம்மாண்ட தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு, 4வது பிரதான சாலை, 2வது அவென்யு, 3வது அவென்யு, 7வது அவென்யு வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயம் வரை நடைபெற உள்ளதையொட்டி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதன் படி அடையாறு பகுதிகளில் மாற்று வழிகளாக
1. திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லும். மக்கள் கூட்டம் அதிகமாகவும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது 3வது அவன்யூ, & 2வது அவன்யூ நோக்கி அனைத்து உள்வரும் வாகனங்களும் டாக்டர் முத்துலட்சுமி பார்க்கில் (எம்எல் பார்க்) - திரும்பி- LB சாலை- எம்ஜி சாலை வழியாக அனுப்பப்படும்.
2. எம்ஜி சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை- சாஸ்திரி நகர் பேருந்து
நிலையம்- 2வது அவன்யூ வழியாக திருப்பி விடப்படும்.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
பெசன்ட் நகர் கடற்கரை,பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு வருபவர்கள் கீழ்கண்ட இடங்களில் வாகனம் நிறுத்துமிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி.
2. அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,
3. பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை
4. பெசன்ட் நகர் 4வது அவென்யு
5. பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு
இதையும் படியுங்கள்