
ரயில் தீ விபத்தில் 9 பேர் பலி
மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் அதிகாலையில் டீ போடுவதற்காக வட மாநில சுற்றுலா பயணிகள் அடுப்பை பற்ற வைத்த போது கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்துவிட்டது. இதனால் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீயானது பற்றி எரிந்தது. மேலும் ரயில் பெட்டியில் கொள்ளையர்கள் ஏறி விடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் கதவுகளை மூடி வைத்ததாலும் வயதான பயணிகள் இருந்ததாலும் உடனடியாக பயணிகளால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப திட்டம்
இறந்த 9 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை முடிவடைந்ததையடுத்து சொந்த ஊருக்கு உடல்களை அனுப்ப ஏற்பாடு நடைபெற்றது. இதனையடைத்து 9 பேரின் உடல்களுக்கும் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மூன்று ஆம்புலன்ஸ் மூலம் 9 பேரின் உடல்களும் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதன் படி காலை 11 மணி விமானத்தில் 5 உடல்களும், 11.55 மணி விமானத்தில் 4 உடங்களும் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்
மதுரை ரயில் விபத்து: நாளை தொடங்கும் விசாரணை - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவு!