கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீலா ராஜேஷ் பெயர் மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொடங்கியதில் இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன.
சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து புகழ்பெற்றவர் பீலா ராஜேஷ். சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரது கணவர் பெயர் ராஜேஷ் தாஸ். சிறப்பு டிஜிபியாக இருந்தவர். பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தன்னுடைய பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றி கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒருவர் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் எனில் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் இதுவரை பல்வேறு அரசு ஆவணங்களில் நமது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும். செய்தித்தாள்களில் கொடுத்துள்ள விளம்பரத்தில் அதில், ”இனி வரும் காலங்களில் டாக்டர். பீலா வெங்கடேசன் என்று மட்டுமே அறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது ராஜேஷ் என்ற கணவர் பெயரை நீக்கி விட்டு தந்தை பெயர் வெங்கடேசனை சேர்த்து கொண்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றியிருக்கிறார். இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..