ஆருத்ரா தரிசனம்; 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு

Published : Dec 12, 2023, 05:31 PM IST
ஆருத்ரா தரிசனம்; 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு

சுருக்கம்

சிதம்பரம் நராஜர் ஆலய ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகின்ற 27ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் உற்சவமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்வை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் வருகின்ற 27ம் தேதி மேற்கொள்ளப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 27ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக ஜனவரி மாதம் 6ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!