5 star ஓட்டல்களில் இனி பாத்டப் இருக்காது...! வெளிவந்த அடுத்த தகவல்....!

First Published Feb 27, 2018, 5:58 PM IST
Highlights
bathtub will be removed from star hotels


5 star ஓட்டல்களில் இனி பாத் டப் இருக்காது...வெளிவந்த அடுத்த  தகவல்....!

5 star ஓட்டல்களில் இனி பாத்டப் பயன்படுத்துவதால்,அதிக தண்ணீர் செலவாகிறது என்பதற்காக பாத்டப் அகற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, 5 star ஓட்டல்களில் பாத் டப் என்பது கட்டாயம் இருக்க வேண்டும்என்ற விதி இருந்தது.ஆனால் அது ஒரு கட்டாயம் கிடையாது என தெரிவிக்கப் பட்டு உள்ளது

சென்னையில் உள்ள தாஜ், ஐடிசி உள்ளிட்ட ஸ்டார் ஓட்டல்களில் தங்குபவர்கள், ஷவரில் குளிப்பதை தான் அதிகம் விரும்புகின்றனர்.காரணம் பாத் டப்பில் நேரம் ஒதுக்கி அதிக நேரம் குளிப்பதை விட,  ஷவரில்  விரைவில் குளித்துவிட்டு  மற்ற  வேலைகளை பார்ப்பதை விரும்புகின்றனர்.

ஒரு சில ஸ்டார் ஓட்டல்களில், ஸ்டீம் பாத் எடுத்துக்கொள்வதற்கும்,ஆயில் மசாஜ்  செய்வதற்கும் தனி இடத்தை ஒதுக்கி அதற்கேற்றவாறு ஏற்பாடு செய்கிறார்கள்.

மேலும், பாத்டப் அகற்றுவதால்,அறைகளில்கூடுதல் இடம் கிடைக்கும்,தங்குவதற்கும் நல்ல விசாலமாக  இருக்கும் என ஓட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாய் உள்ளது  

பாத்டப்களை நீக்குவதற்கான காரணம் இவை மட்டுமல்ல.பாத்டப்பில் குளிக்கும் போது 370 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கண்ணாடி ஷவரில் குளிக்கும் போது 70 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படும் என்பதும் ஒரு காரணமாகும்.

click me!