ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

 
Published : Sep 30, 2017, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

சுருக்கம்

Banwarilal was sworn in as Governor on Wednesday?

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

அதேபோல், மேகாலயா, அசாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

தமிழகத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!