
சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பின்னிப்பெடலெடுத்து வருகிறது. கடந்த வருடம் பெய்து வந்தாலும் திருப்திகரமான மழைப்பொழிவு இல்லை. சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருதால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.