
கட்டப்பனை,
கட்டப்பனை அருகே, தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரம் தயாரித்த விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனையை அடுத்த அணைக்கரை பகுதியில் காவல்துறையினர் சுற்றுப்பார்வையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி கையில் பையுடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அப்பகுதியைச் சேர்ந்த சாம்ஜார்ஜ் (50) என்பவரிடம் இருந்து வயலுக்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரத்தை வாங்கிச் செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த மருந்துகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரம் என்பது தெரியவந்தது. இதையடுத்து சாம்ஜார்ஜை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் வைத்து போலி உரம், தடை செய்யபப்ட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரளித்த தகவலின் பேரில் கட்டப்பனை 20 ஏக்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து சாம்ஜார்ஜிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.