கையாடல் செய்த ரூ.25 லட்சம் வழிப்பறி – புகார் கொடுத்த வங்கி ஊழியர்கள் கைது

 
Published : Nov 21, 2016, 10:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
கையாடல் செய்த ரூ.25 லட்சம் வழிப்பறி – புகார் கொடுத்த வங்கி ஊழியர்கள் கைது

சுருக்கம்

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் மைசூர் ஸ்டேட்வங்கி கிளை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் இளங்கோ (44). நேற்று இரவு இளங்கோ, ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகளை, நங்கநல்லூர் ஆக்ஸீஸ் வங்கி கிளையில் மாற்றுவதற்காக காரில் புறப்பட்டார். அவருடன், ஆக்டிங் டிரைவர் சக்திவேல் (44) காரை ஓட்டி சென்றார்.

கார் பல்லாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த 2 பைக், காரை முந்தி சென்று வழிமறித்தது. அதில் இருந்து இறங்கிய 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.25 லட்சத்தை பறித்து சென்றனர்.

இதனால், திகைத்துபோன அவரும், டிரைவர் சக்திவேலும், மீண்டும் சாஸ்திரி நகர் கிளை அலுவலகத்துக்கு சென்று, மேலாளர் லோகேஷ்ராவிடம், சம்பவத்தை கூறினர்.

இதகுறித்து சாஸ்திரி நகர் போலீசில், மேலாளர் லோகேஷ்ராவ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சம்பவம் நடந்த பகுதி பல்லாவரம் எல்லைக்கு உட்டபட்டது என்பதால், இந்த வழக்கு பல்லாவரம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இளங்கோவன் கொண்டு சென்ற பணம் , கணக்கில் காட்டாமல் கையாடல் செய்தது என தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும், கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
இந்தி எதிர்ப்பு போராட்டம்... இதுவரை வெளிவராத ஆவணங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!