Holiday List 2023; 2023ம் ஆண்டுக்கான அரசு, வங்கி விடுமுறை லிஸ்ட்; ஜனவரியில் மட்டும் 6 நாள் லீவு

By Velmurugan s  |  First Published Dec 26, 2022, 10:59 AM IST

2022ம் ஆண்டு நிறைவு பெற்று 2023ம் ஆண்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் உள்ள அரசு விடுமுறைகள், வங்கி விடுமுறைகளின் தேதி விவரங்கைளை இங்கோ காண்போம்.
 


வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 2023 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் இதோ.

ஜனவரி
ஜனவரி 2023 மாணவர்களுக்கு சற்று சிறப்பான மாதமாகவே உள்ளது. இந்த மாதத்தில் 6 நாள் அரசு விடுமுறையாகும். அதன்படி
ஜன. 1 - ஆங்கில புத்தாண்டு (ஞாயிறு)
ஜன. 14 - போகி பண்டிகை (சனி)
ஜன. 15 - தை பொங்கல் (ஞாயிறு)
ஜன. 16 - மாட்டு பொங்கல் (திங்கள்)
ஜன. 17 - உழவர் திருநாள் (செவ்வாய்)
ஜன. 26 - குடியரசு தினம் (வியாழன்)
ஜன. 14, 28 ஆகிய சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

Tap to resize

Latest Videos

பிப்ரவரி
மாணவர்கள், அரசு பணியாளர்களுக்கு பிப்பரவரி மாதத்தில் 5ம் தேதி ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை. அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்த மாதத்தில் எந்தவொரு அரசு விடுமுறையும் இல்லை என்றே எண்ணிக்கொல்லலாம். 11, 25 ஆகிய தேதிகளில் வரும் சனிக் கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

மார்ச்
மார்ச் 22ம் தேதி (புதன்) தெலுங்கு வருட பிறப்பு (உகாதி) பண்டிகைக்கு அரசு விடுமுறை. 11, 25 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல்
ஏப். 4 - மஹாவீர் ஜெயந்தி (செவ்வாய்)
ஏப். 7 - புனிதவெள்ளி (வெள்ளி)
ஏப். 14 - தமிழ்புத்தாண்டு (வெள்ளி)
ஏப். 22 - ரம்ஜான் (சனி)
ஏப். 8, 22 தேதிகளில் வங்கி விடுமுறை

மே
மே 1 தொழிலாளர் தினம் (திங்கள்), 13, 27 தேதிகளில் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை.

ஜூன்
ஜூன் 29 பக்ரீத் (வெள்ளி), 10, 24 தேதிகளில் வங்கி விடுமுறை.

ஜூலை
ஜூலை 29 மொஹரம் (சனி), 8, 22 தேதிகளில் வங்கி விடுமுறை.

ஆகஸ்ட்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (செவ்வாய்), 12, 26 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர்
செப். 6 - கிருஷ்ணஜெயந்தி (புதன்),
செப். 19 - விநாயகர் சதுர்த்தி (செவ்வாய்),
செப். 28 - மிலாது நபி (வியாழன்)
செப். 9, 23 வங்கி விடுமுறை

அக்டோபர்
அக். 2 காந்தி ஜெயந்தி (திங்கள்),
அக். 23 சரஸ்வதி பூஜை (திங்கள்),
அக். 24 விஜய தசமி (செவ்வாய்),
அக். 14, 28 வங்கி விடுமுறை.

நவம்பர்
நவ. 12 தீபாவளி பண்டிகை (ஞாயிறு), 11, 25 தேதிகளில் வங்கி விடுமுறை.

டிசம்பர்
டிச. 25 கிறிஸ்துமஸ் (திங்கள்), 9, 23 வங்கி விடுமுறை.

click me!