அனிதா தற்கொலை விவகாரம் !!  அரியலூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு….

 
Published : Sep 02, 2017, 12:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
அனிதா தற்கொலை விவகாரம் !!  அரியலூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு….

சுருக்கம்

Bandh in ariyalur district...anitha sucide

அனிதா தற்கொலை விவகாரம் !!  அரியலூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு….

அரியலூர் மாணவி தற்பொலை செய்து கொண்டதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் எதிர் கட்சிகள் சார்பில் நாளை  முழு அடைப்பு போராட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும்,  அரியலூரில் நாளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 5-ம் தேதி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நெல்லை மக்களே ரெடியா? பொருநை மியூசியம்: டிக்கெட் விலை முதல் டைமிங் வரை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!