
சிவகங்கை
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களை தடை செய்து, வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும் என்று கோரி வாழை இலைகளுடன் வந்து ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு அளித்தனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தன்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைந்த கூட்டத்தில் திருப்புவனம் பகுதியை சேர்ந்த வீரகுல அமரன் இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மாவட்டம் முழுவதும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களுக்கு பதிலாக, வாழை இலையில் உணவு வழங்க வேண்டும் என்றும், கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனு வாழை இலைகளுடன் வந்து மனு அளித்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் இளைஞர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களிடம் இருந்த வாழை இலைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களை தடை செய்து, வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும் என்று இளைஞர்கள் மனு அளிக்க சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.