
மார்ச் 1–ந்தேதி முதல் பெப்சி , கோக் இல்லை…புதுச்சேரி வணிகர்கள் அதிரடி முடிவு…
மார்ச் 1ந்தேதி முதல் புதுச்சேரியில் கோக் பெப்சி போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று வணிகர்கள்கூட்டமைப்பு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற பானங்கள் விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புதுவை மாநில வணிகர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில்தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மார்ச் 1ந்தேதி முதல் கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களைவிற்பனை செய்வது இல்லை என முடிவு செய்யப்பட்டது..