"கோக், பெப்சியை அரசே தடை செய்யவேண்டும்" - பாட்டில்களை உடைத்து வெள்ளையன் பிரச்சாரம்

 
Published : Feb 04, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"கோக், பெப்சியை அரசே தடை செய்யவேண்டும்" - பாட்டில்களை உடைத்து வெள்ளையன் பிரச்சாரம்

சுருக்கம்

புற்றுநோயை ஏற்படுத்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை அரசே  தடை செய்ய வேண்டும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்றபிரம்மாண்ட போராட்டம்,தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துடன் விவசாயிகள் தற்கொலை, வறட்சி, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை என விரிந்து கொண்டே சென்றது. 

இதன் தாக்கமாக  வெளிநாட்டு குளிர் பானங்களான பெப்சி, கோக்கை புறக்கணிப்போம் என குரல்கள் கேட்டதுடன் அதன் விற்பனையும் பெருமளவு சரிந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள  வணிகர் சங்கங்களும், பெப்சி, கோக் விற்பனையை மார்ச் 1 ஆம் தேதி முதல்  நிறுத்த இருப்பதாக அறிவித்தன.

அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உள்நாட்டு  குளிர்பானங்கள், பதனீர், இளநீர், மோர் ஆகியவற்றின் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது. இத்தகைய குளிர்பானங்கள்  தற்போது  திரையரங்குகளில் கூட விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் புற்றுநோயை ஏற்படுத்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை அரசே  தடை செய்ய வேண்டும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு பான பாட்டில்களை உடைத்து கடைகளில் விற்க வேண்டாம் என வெள்ளையன் பிரசாரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கோக், பெப்சி பானங்களை தடைசெய்து அன்னிய ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!