
நீலகிரி மலை ரயில்பாதையில் குட்டியுடன் மூன்று காட்டுயானைகள் முகாமிட்டிருந்ததை வனத்துறையினர் அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் பருவமழை இல்லாததால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் நீரோடைப்பகுதிகளை நோக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
குன்னூர் அருகேயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கு வந்த குட்டியுடன் சேர்ந்த மூன்று காட்டுயானைகள் அப்பகுதியில் நீண்ட நேரம் முகாமிட்டிருந்ததால், அருகிலிருந்த ரயில்வே ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற குன்னூர் வனச்சரகருடன் கூடிய தனிக்குழு யானையை விரட்டும் பயணியில் ஈடுபட்டது.
இதனால், யானைகள் குடியிருப்பு பகுதியில் வராமலிருக்க ஆங்காங்கே தீமுடிட்டினர். இதன் பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டினர்.
இதனால், மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்தும் தடையின்றி இயக்கப்பட்டது.
மேலும், காட்டுயானைகள், குடியியிருப்பு பகுதியில் வராமல் இருக்க குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை மரம், பலாபழம் உள்ளிட்டவைகளை அகற்ற வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.