
சென்னை அசோக்நகரை சேர்ந்த ராஜன் என்பவர் கடந்த 11 ஆம் தேதி அன்று நாரயணன் சாலை அருகில் உள்ள பள்ளியில் தனது சைக்கிளை நிறுத்தி சென்றுள்ளார்.
அப்போது மர்ம ஆசாமிகள் அவரது சைக்கிளை திருடி சென்றனர்.
அசோக் நகரில் பதிவான சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது எர்ணாவூர் 47 பிளாக் பகுதியை சேர்ந்த செந்தில் (39) மணலி புது நகரை சேர்ந்த அக்பர் (35). கொளத்தூர் பகுதியை சேர்ந்த குமார் (22).
தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த முத்துக்கனி (32) ஆகியோர் கூட்டாக திருடி தனித்தனியாக விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
திருடும் வேலையை அக்பர் மற்றும் செந்தில் செய்துள்ளனர். திருடிய சைக்கிளை விற்பனை செய்யும் வேலையை மற்றவர்கள் செய்துள்ளனர்.
ஆட்டோவில் சவாரி செல்வது போல் சென்று சைக்கிள்கள் குறிப்பாக புதிய விலை உயர்ந்த சைக்கிள்கள் எங்காவது நின்றால் அதை நோட்டமிட்டு திருடுவது இவர்கள் வாடிக்கை. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இந்த பலே ஆசாமிகள் சிக்கியுள்ளனர்.
சமீபத்தில் சென்னையை கலக்கிய பைக் திருடன், கார் திருடன்களை அஷோக் நகர் போலீசார் பிடித்தனர் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடித்தனர். தற்போது சைக்கிள் திருடர்களை பிடித்துள்ளனர்.