அயோத்தி சாமியார் பேச்சு வன்முறையல்ல! மனம் வெதும்பி பேசிவிட்டார்: செல்லூர் ராஜூ

By SG Balan  |  First Published Sep 5, 2023, 8:31 PM IST

உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவந்தால் ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் ஒருவர் பேசியது வன்முறை அல்ல, மனம் வெதும்பல் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக அவரது கருத்து என்ன என்றும், அயோத்தி சாமியார் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்துப் பேசியது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Tap to resize

Latest Videos

அதற்கு பதிலளித்த அவர், “சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் செல்லவிரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக்கூடிய கட்சி அதிமுக. அதிமுகவில் சாதி மத வேறுபாடுகள் கிடையாது" என்றார்.

உதயநிதி மீண்டும் சனாதனம் பற்றிப் பேசினால், ஆட்சி கலைக்கப்படுமாம்! உதார் விடும் சுப்ரமணியன் சுவாமி

பின், அயோத்தி சாமியார் பேச்சுக்கு குறித்து சொன்ன செல்லூர் ராஜூ, "சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பிப் போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறை என்று நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று குறிப்பிட்டார்.

அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதி தலையைக் கொண்டுவந்தால் ரூ.10 கோடி தருவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அதற்கு பதில் சொன்ன உதயநிதி, என் தலையைச் சீவ 10 ரூபாய் போதும். நானே சீவிக்கொள்வேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

திமுகவினர் சார்பில் அயோத்தி சாமியாரைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, அந்த சாமியார் உதயநிதி தலையைக் கொண்டுர 10 கோடி ரூபாய் போதாவிட்டால் இன்னும் பணம் தருவதாகவும், தலை இருந்தால்தானே சீவ முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சரியல்ல: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

click me!