அயனாவரம் நகை கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது 3 கிலோ தங்கம் தங்கம் பறிமுதல்

First Published Dec 20, 2016, 12:32 PM IST
Highlights


அயனாவரம் நகை கொள்ளையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தினேஷ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்து 3 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அயனாவரம் 9 கிலோ நகை கொள்ளை விவகாரத்தில் நகை பணத்துடன் மாயமான  கடை ஊழியர்  தீபக் பிடிபட்ட நிலையில் சில நாள் கழித்து  அவனது  காதலியும் ராஜஸ்தானில் பிடிபட்டார். பின்னர் இவர்களிடம் நகை வாங்கிய முக்கிய பெண் ஒருவரும் பிடிபட்டார்.

கடந்த செப் 3 அன்று அயனாவரத்தில்  கோபாராம் என்பவரது நகைக்கடையில்  9 கிலோ தங்க நகைகள் , ரூ.2 லட்சம் பணத்தை கடையில் வேலை செய்த தீபக் என்ற வாலிபர் திருடி கொண்டு மாயமானார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தீபக் நகை கடை உரிமையாளர் கோபாராமின் பள்ளிபருவ தோழர் குணாராமின் மகன் எனபதும் அவனும்  அவனது  காதலி மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுஅபட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக சென்ற தீபக் ,அவனது காதலி, நண்பன் மூவரும் தங்களது செல்போனை அணைத்து வைத்ததால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 35 நாள் தேடலுக்கு பின்னர் அக்டோபர் முதல் வாரத்தில் போலீசாரிடம்  தீபக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிக்கினான். அவனை கைது செய்து சென்னை கொண்டு வர இன்ஸ்பெக்டர் கண்ணகி தலைமையில் தனிப்படை ஜெய்ப்பூர் சென்று சென்னை கொண்டு வந்து ரிமாண்ட் செய்தது.

இந்நிலையில் தீபக்கின் காதலியும் ஒரு வாரம் கழித்து கைது செய்யப்பட்டார். ஜெய்ப்பூர் போலீசாரிடம் சிக்கிய  அவரிடமும் திருட்டு போன நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் திருட்டு போன 9 கிலோ நகையில் 1.5 கிலோ மட்டுமே அந்த பெண்ணிடம் சிக்கியது.

 

இந்த திருட்டில் மூளையாக செயல்பட்டவன் ராஜஸ்தானை சேர்ந்த லாரி டிரைவர் தினேஷ். இவன் ஒரு கொள்ளை கூட்டத்தையே நடத்தி வருகிறான். தினேஷிடம் கூட்டாளியாக இருந்த தீபக் மற்றும் அவனது நண்பர்கள் தான் இந்த திருட்டை செய்தது. 

முக்கிய குற்றவாளியான தினேஷிடம் தான் திருடப்பட்ட மீதி 7.5 கிலோ நகைகள் இருந்தன. தீபக கும்பல் பிடிபட்டதும் சாமர்த்தியமாக அவன் தப்பி விட்டான். அவனை பிடிக்க இன்ஸ்பெக்டர் மில்லர் தலைமையிலான தனிப்படை வலைவீசி தேடி கொண்டிருந்தது. ஏறத்தாழ 66 நாட்கள் தேடலுக்கு பின் தினேஷ் ராஜஸ்தானில் சிக்கினான். 

அவனிடமிருந்து 3 கிலோ தங்கத்தை போலீசார் கைப்பற்றினர். அவனை சென்னை அழைத்து வந்துள்ளனர். இன்று அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவான் என தெரிகிறது. 

click me!