
கிருஷ்ணகிரி
பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தள்ளது. எனவே, பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒகேனக்கல் குடிநீர் வாரத்துக்கு மூன்று அல்லது ஐந்து முறை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நீரைச் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மழைநீரை சேமித்து வைக்க வேண்டும்.
கொசுக்களை ஒழிக்க வீடுகளில் நீர் சேமிப்புத் தொட்டிகள், கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கழிப்பறை இல்லாதவர்களுக்கு தமிழக அரசின் ரூ.12 ஆயிரம் நிதி மூலமாக கழிப்பறைக் கட்டி கொடுக்கப்படும்.
பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” என்றுத் தெரிவித்து இருந்தார்.