Jallikattu : தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. திமிறும் காளைகள் .. போட்டி போடும் மாடு பிடி வீரர்கள்

By Ajmal KhanFirst Published Jan 15, 2024, 7:52 AM IST
Highlights

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் தங்களது கிடுக்கு பிடியால் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரையில் அவனியாபுரத்தில் தான் பொங்கல் தினத்தில் தொடங்கும், இதனை தொடர்ந்து அடுத்த, அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்கநல்லூர் போன்ற இடங்களில் நடைபெறும், தமிழர்களுடைய வீர விளையாட்டை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மதுரையில் முகாமிடுவார்கள். விறு, விறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கநாணயம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும். இதே போல வீரர்களிடம் சிக்காமல் தப்பிக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்கப்படும்.

Latest Videos

சீறிப்பாயும் காளைகள்.. போட்டி போடும் காளையர்கள்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் மொத்தம் 6 ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் ‘டோக்கன்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று காலை ( 15-ம் தேதி) தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள், 600 மாடு பிடி வீரர்கள் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

 

சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசளிக்கப்படும். போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொட்டனர், இதனையடுத்து கோயில் காளை திறந்து விடப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக காளைகள் திறந்து விடப்பட்டது. காளைகள் திமிறிக்கொண்டு சீறி பாய்ந்தது. இதனை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். அதே நேரத்தில் மாடு பிடி வீரர்களை தனது கொம்பால் மாடுகள் முட்டி தூக்கி வீசியது

இதையும் படியுங்கள்

பொங்கலோ பொங்கல்.! மாவிலை தோரணங்களோடு புது பானையில் பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி

click me!