"அது வேற வாய், இது நாற வாய்.." பகலில் ஆட்டோ டிரைவர் இரவில் திருடன் - கேமராவில் சிக்கிய பலே ஆசாமி

Asianet News Tamil  
Published : Nov 25, 2016, 07:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
"அது வேற வாய், இது நாற வாய்.." பகலில் ஆட்டோ டிரைவர்  இரவில்  திருடன் - கேமராவில் சிக்கிய பலே ஆசாமி

சுருக்கம்

பகலில் ஒழுக்கமான ஆட்டோ டிரைவராகவும் இரவில் வீடு புகுந்து திருடும் தொழில் செய்துவந்த பலே ஆசாமி கண்காணிப்பு கேமராவில் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர்  அண்ணா மெயின் ரோட்டில் மோசஸ் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 21ம் தேதி 20. ooo பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது.இது தொடர்பாக மோசஸ் புகாரின் பேரில் அஷோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

தி.நகர் துணை ஆணையர் சரவணன், அறிவுரை பேரில் அசோக்நகர் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவந்தனர் .

அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது பல மணி நேரமாக ஆட்டோ ஒன்று நிற்பதும் அதில் இருந்து இறங்கி செல்லும் டிரைவர் படியேறி செல்வதும் பதிவாகி இருந்தது.

  போலீசார் ஆட்டோ என்னை கொண்டு விசாரித்த போது கண்காணிப்பு கேமராவில் உலாவும் நபர் பழைய குற்றவாளி அண்ணாமலை என தெரியவந்தது. அண்ணாமலையை விசாரணை செய்த போது அப்பகுதியில் ஆட்டோவை நிறுத்தி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அசோக்நகர் போலீசார் அவனை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தொடந்து விசாரித்து வருகின்றனர்.

அசோக் நகர் , எம்.ஜி.ஆர் நகர் , கே.கே.நகர் பகுதியில் உதவி ஆணையர்  அரிக்குமார் தலைமையில் சி.சி.டிவி கேமரா மூலமாக திருடர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை மோட்டார் பைக் திருடர்கள் , கார் திருடர்கள் என வரிசையாக சிக்கி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!