வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து, உதைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது; மாமனார், மாமியாரும் உடந்தை...

 
Published : Jul 02, 2018, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து, உதைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது; மாமனார், மாமியாரும் உடந்தை...

சுருக்கம்

Auto driver arrested for beating his wife for dowry

வேலூர் 

வேலூரில் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து, உதைத்து கொடுமைபடுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யபட்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் அரக்கோணத்தைச் சேர்ந்த மோகனபிரியாவிற்கும் (28) கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 

திருமணத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் தனது மனைவியிடம் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தி உள்ளார். 

கடந்த மாதம் 26-ஆம் தேதி ரூ.5 இலட்சம் மற்றும் மோகனபிரியாவின் தந்தை வீட்டு பத்திரத்தை வரதட்சணையாக வாங்கி வரும்படி ரஜினிகாந்த் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மோகனபிரியா மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதில் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த், மனைவியை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் தந்தை கோட்டீஸ்வரன், தாய் ரேவதி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். 

இதுகுறித்து மோகனபிரியா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரஜினிகாந்த், கோட்டீஸ்வரன், ரேவதி ஆகிய மூவர் மீதும் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

பின்னர் இதுகுறித்து விசாரணையைத் தொடர்ந்த காவலாளர்கள் ரஜினிகாந்தை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கோட்டீஸ்வரன், ரேவதி ஆகியோரை காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!