சாராயத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகள் பலி; தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி... 

 
Published : Jul 02, 2018, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
சாராயத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகள் பலி; தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி... 

சுருக்கம்

mother daughter died who drink poison with alcohol Father admit in icu...

வேலூர்
 
வேலூரில், சாராயத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷம் குடித்த தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அருகே உள்ள திருவலத்தை அடுத்த கண்டிப்பேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (52). இவருடைய மனைவி ராஜேந்திரா (45). இவர்களது மகள் சகுந்தலா (19). 

நேற்று காலை கண்டிப்பேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் நிலத்தில் இவர்கள் மூவரும் சாராயத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதனால், ராஜேந்திரா, சகுந்தலா ஆகியோர் இறந்துவிட்டனர். சாமுவேல்ராஜ் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

இதுகுறித்த தகவல் திருவலம் காவலாளர்களுக்கு கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலாளர்கள், சாமுவேல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தாய் மற்றும் மகளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்தார்களா? அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றுவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!