
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டதால்,நேற்று இரவு முதலே தமிழக கர்நாடாக எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது.
இதற்காக கர்நாடக எல்லையில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களையும், தமிழகத்திலிருந்து கர்னாடக செல்லும் வாகனத்தையும் எல்லையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,தமிழகம் எதிர்பார்த்தபடி,தீர்ப்பு வராததால் அதிருப்தியில் உள்ளனர் மக்கள்.
தீர்ப்பின் படி,
தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது.எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.விவசாய பெருமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து முடக்கப்பட்டதுஅத்திபள்ளியில் அனைத்து வகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக வாகனம் தமிழகம் வரவும், தமிழக வாகனம் கர்நாடகா செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால்,பொதுமக்கள் செய்வது அறியாது,பயணிக்க முடியாமல் எல்லையில் தவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்,தமிழக எல்லையில் இலவச ஆட்டோக்கள் இயக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.தற்போது இதன் மூலம் மக்கள் தமிழக கர்நாடக எல்லையில் சுமூகமாக பாதுகாப்புடன் பயணித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து எந்த வித சிரமும் இன்றி எப்போதும் போல பேருந்து இயக்கம் செய்தால் வசதியாக இருக்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.