திருவள்ளுவரை வணங்கிய அஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்... வள்ளுவர் கிரேட் என புகழ்ச்சி...

By Arun VJFirst Published Aug 12, 2019, 5:26 PM IST
Highlights

ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணியின்  ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பாதங்களைத் தொட்டு வணங்கி உள்ளார் 

ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணியின்  ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பாதங்களைத் தொட்டு வணங்கி உள்ளார் 


தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட்  போட்டியில் விளையாடும்  வீரர்களையும் அதன் ரசிகர்களையும் உற்சாக படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி  பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷேன் வாட்சன் தமிழகம் வந்துள்ளார் 

அவருடன் இன்னும் பல கிர்க்கெட் வீரர்களும் வருகை தந்துள்ளனர் இந்நிலையில்  திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் ட்ரேகன் அணிகளுக்கு இடையேயான  போட்டியில் கலந்து கொண்ட வாட்சன் கிரிக்கெட் வீரர்களையும் பார்வையிட வந்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்

போட்டி முடிந்த பின்னர் நெல்லையில் இருந்து தன் கார் மூலம் கன்னியாகுமரி சென்ற அவர் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தை பார்வையிட்டார் அங்கு கடலில் நிறுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை காண படகின் மூலம் சென்று வாட்ஸன் திருவள்ளுவர் சிலையின் அழகை கண்டு ரசித்தார், நீண்ட நேரம்  சிலையையே உற்று பார்த்துக் கொண்டிருந்த அவர் திருவள்ளுவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் 

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இருந்த அவர் பின்னர் அருகில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார் 

கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டியில் ரத்தம் வடிய விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த வாட்சன் அங்கு வந்து இருப்பதை கண்டு கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்

click me!