
டெல்லியில் 37 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
37 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன் எனவும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், அனைத்து விதமான நலன்களை பெற்று தர முடிவெடுப்பேன் எனவும் உறுதி அளித்தார்.