
மயிலாப்பூரில் ஏ.டி.எம்.,ல் பணம் இல்லாத விரக்தியால் மர்மானபார்கள் சிலர் ஏ.டி.எம்., எந்திரத்தை உடைத்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி கடந்த 9 ம் தேதி இரவு, 500,1000 நோட்டுக்கள் செல்லாது என திடீரென அறிவித்தார். இதனால், நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றுவதற்காக ஏ.டி.எம்., மையங்களிலும், வங்கிகளிலும் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர்.
வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெரும்பாலானோர் ஏ.டி.எம்., மையங்களையே நாடுகின்றனர். ஆனால், விரைவிலே பணம் தீர்ந்து விடுவதாலும், இயந்திரகோளாறு காரணமாகவும் பல ஏ.டி.எம்., எந்திரங்கள் செயல்படாமல் முடங்கிய நிலையிலே உள்ளன.
இந்நிலையில், மயிலாப்பூர் லஸ் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., ஒன்று உள்ளது. அதில் பணம் எடுப்பதற்காக சிலர் சென்றுள்ளனர். அங்கு பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த எந்திரத்தை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து, அப்பகுதி போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.