
சென்னை கொருக்குப்பேட்டை அருகே ஏகாம்பர செட்டி தெரு அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் தனியார் பள்ளிகளும், தனியார் நிறுவனங்களும், கடைகளும் உள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரி, வியாபாரம் என்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் தினமும் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் சென்று வருகின்றனர்.
அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, தெருவில் கோலம் போடும் பெண்களிடம் கேலி, கிண்டல் செய்வதுடன் பல்வேறு சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்கள் என அடிக்கடி போலீசாருக்கு புகார் செல்கிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும், அவர்கள் வீட்டின் முன்பு போட்டு வைத்த கோலத்தின் மீது வாந்தி எடுப்பது போன்ற அறுவறுக்க செயல்களை செய்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிமகன்கள் சிலரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பெண் போலீஸ் ஒருவர், சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு போதையில் விழுந்து கிடந்த குடிமகன்களை அடித்து, அந்த பகுதியில் இருந்து விரட்டினார்.
இங்கு குடிமகன்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இதனால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் செய்து விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியும் காலம் கடத்தினால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.