நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் விறு விறுப்பாக நடைபெற்று் வருகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளில் வாக்கப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது. தமிழகந்த்தில் 6 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்தநிலையில் இன்று காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் பதிவான வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி இன்றை காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10 சதவிகிதமும், தருமபுரியில் 15.04சதவிகிந வாக்குகளும், அதற்கு அடுத்த படியாக சேலத்தில் 14.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த வாக்கு சதவிகிதம் என்று பார்க்கும் போது மத்திய சென்னையில் 8.59 சதவிகிதமும், வட சென்னையில்9.73சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.