Agni Natchathiram: மக்களே உஷார்.. இன்று முதல் கத்திரி வெயில் தொடக்கம்.. சுட்டெரிக்கப் போகும் சூரியன்..

Published : May 04, 2023, 09:13 AM IST
Agni Natchathiram: மக்களே உஷார்.. இன்று முதல் கத்திரி வெயில் தொடக்கம்.. சுட்டெரிக்கப் போகும் சூரியன்..

சுருக்கம்

கோடை வெயிலின் உச்சகட்ட காலமான கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்பதால் மதியம் நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகரிக்கும் வெப்பம்

தமிழகத்தில் கோடை வெயில் காலமான மார்ச் முதல் ஜூன் வரை கால கட்டமாகும், இந்த காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை நீடிக்கும். அதற்கேற்றார் போல கடந்த சில வாரங்களாக வெயிலும் மக்களை வாட்டி வதைத்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக தமிகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குழுமையான வானிலை நீடித்து வருகிறது. வருகிற 6 ஆல்லது 7 ஆம் தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று (மே 4ஆம் தேதி)  தொடங்குகிறது.

ஆளுநரைச் சந்தித்த பிரபல யூடியூபர் இர்ஃபான்... எதற்கு தெரியுமா?

 அக்னி நட்சத்திரம் தொடங்கியது

சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும் இக்காலம் மே 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 117 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிகிறது. எற்கனவே மத்திய அரசு வெயில் காலத்தில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசர வேலையை தவிர்த்து மற்ற வேலைகளுக்கு  வெளியே செல்ல வேண்டாம் எனவும், வெயிலை சமாளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தது. மேலும் பருத்தி போன்ற மென்மேயான ஆடைகளை உடுத்தவும் தண்ணீர் சத்து அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும் கூறியிருந்தது.  

இதையும் படியுங்கள்

கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் தடை விதித்திடுக..! இல்லையென்றால் முற்றுகை போராட்டம்- எச்சரிக்கும் எஸ்டிபிஐ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!