அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

 
Published : Oct 20, 2016, 01:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

சுருக்கம்

 

குன்னம்,

பெரம்பலூரில் அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை காவல்துறை கைது செய்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் படைகாத்து (47). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

இவருக்கு சொந்தமான கிணற்றில் உடைக்கப்பட்ட கற்களை படைகாத்துவின் டிராக்டரில் ஓட்டுநர் சுந்தர் (35) என்பவர் ஏற்றி கொண்டு பேரளி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்த போது கீழபுலியூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் டிராக்டரை மறித்து கற்களை எங்கிருந்து ஏற்றி வருகிறீர்கள், அனுமதி உள்ளதா என்று டிரைவரிடம் கேட்டார்.

இதுகுறித்து டிரைவர் சுந்தர் தனது உரிமையாளர் படைகாத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து படைகாத்து சம்பவ இடத்திற்கு வந்து வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பன்னீர்செல்வம் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறை சப்–இன்ஸ்பெக்டர் குமார், அரசு அதிகாரியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும், அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்ததாக படைகாத்து மற்றும் டிரைவர் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!