ஆரணி கமண்டல் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு; விவசாயிகள் மகிழ்ச்சி…

Asianet News Tamil  
Published : Dec 14, 2016, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஆரணி கமண்டல் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு; விவசாயிகள் மகிழ்ச்சி…

சுருக்கம்

ஆரணி,

பெரும் கனமழையால், ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஆற்றில் வெள்ளம் ஓடுவதைக் கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் சென்னையில் நேற்று வார்தா புயல் தாக்கியதின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

அதேபோல் ஆரணி சுற்றவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மழையின் அளவு 102.6 மில்லிமீட்டராகும்.

இதன் காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புரண்டோடியது.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இருபுறமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை ஆரணி சுற்றுவட்டார விவசாயிகள் ஆற்றில் வெள்ளம் புரண்டோடுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் மழையின் காரணமாக ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!
விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!