மதுரை.. 11 வயது சிறுமி.. வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ராணுவ வீரர் - மூடி மறைத்த வளர்ப்பு தாய்!

By Ansgar R  |  First Published Mar 26, 2024, 9:16 PM IST

Army Official Killed Adopted Daughter : மதுரையில் 11 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த ராணுவ வீரரும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான அந்த பெண், இறந்த அந்த சிறுமியின் அத்தை ஆவார். சிறுமியின் தாய் இறந்த பிறகு அச்சிறுமியை எடுத்து வளர்த்து வந்துள்ளார். 

இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்த அந்த நபர் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான, ஒரு மாத விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அந்த நபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை சிறுமி தனது அத்தையிடம் கூறியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

மச்சினியை வளைத்துபோட நினைத்து வசமாக சிக்கிய காதல் கணவன்; சேலத்தில் பரபரப்பு

கடந்த மார்ச் 22-ம் தேதி இறந்த குழந்தையை மயங்கிக் கிடந்ததாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அந்த தம்பதியினர் அழைத்துச் சென்றதையடுத்து இந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்தது. இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பிறகு அந்த தம்பதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர், அச்சிறுமியை அடித்துக் கொன்றுவிட்டார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். தம்பதியினர் மீது கொலை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த அந்த சிறுமியின் தாய், அவர் குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார். இதனையடுத்து இறந்த அந்த சிறுமி மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரியும் பின்னர் அவர்களின் தந்தையால் கைவிடப்பட்டுள்ளார்கள். பிறகு அவர் தனது அத்தை மற்றும் அவரது இராணுவ வீரர் மாமாவால் வளர்க்கப்பட்டார்கள் என்று ஒரு அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

ஃபாரினில் மலர்ந்த கள்ளக்காதல்.. சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை.. வெளியான பரபரப்பு தகவல்..!

click me!