
அரியலூர்
அரியலூரில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் பரவலான மழையால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மானவாரி பயிர்களுக்கு விதை தெளிப்பு பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் போதுமான மழை இல்லாததால் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் அரியலூர், செயங்கொண்டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை நேற்று பெருமழையாக உருவெடுத்தது. பரவலாக பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
மேலும், மானாவாரி பயிர்களுக்கும், சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், முத்துசோளம், மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் இந்த மழை பயனுள்ளதாக அமையும். இதனால், விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.