ஆசிரியர்கள் சரியா வகுப்புக்கு வராங்களா? பாடம் எப்படி நடத்துறாங்க? மாணவர்களிடம் கேட்டு ஆட்சியர் ஆய்வு…

 
Published : Jul 05, 2017, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
ஆசிரியர்கள் சரியா வகுப்புக்கு வராங்களா? பாடம் எப்படி நடத்துறாங்க? மாணவர்களிடம் கேட்டு ஆட்சியர் ஆய்வு…

சுருக்கம்

Are Teachers coming to Class properly? How do they teach you? collector asked students

இராமநாதபுரம்

இராமநாதபுரம், மண்டபம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசியர்களின் வருகை மற்றும் பாடம் நடத்தும் முறைகள குறித்து மாணவர்களிடம் கேட்டு ஆட்சியர் நடராஜன் ஆய்வு நடத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் 12–ஆம் வகுப்பில் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், 10–ஆம் வகுப்பில் 98.16 சதவீதம் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இது முந்தைய கல்வியாண்டை காட்டிலும் நல்ல முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆட்சியர் நடராஜன் இராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அதன்படி வாலாந்தரவை, பெருங்குளம், உச்சிப்புளி, வேதாளை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வரும் விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை அவர்களுக்கு சிரமமின்றி கிடைத்ததா? என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். பின்பு மாணவ, மாணவிகளின் தேர்வு மதிப்பெண் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

மேலும், மாணவர்களுக்கு அந்தந்த பாடம் வாரியாக தொடர்ச்சியாக தேர்வுகள் நடத்துவதோடு உடனுக்குடன் தேர்வு தாள்களை திருத்தி மாணவர்களை சுய மேம்பாடு செய்திட உறுதுணை புரிய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுதவிர ஆசிரியர்களின் பாடம் நடத்தும் முறைகள் மற்றும் ஆசிரியர்களின் வருகை குறித்து மாணவ, மாணவிகளிடத்தில் கேட்டறிந்ததார். அதோடு கல்வி கற்கும் வயதில் கவனங்களை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி நல்லொழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி