ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட்டாருன்னு தெரியலை; இப்படியும் பேசிக்கிறாங்க சபாநாயகர் அப்பாவு!!

By Dhanalakshmi GFirst Published Oct 29, 2022, 4:00 PM IST
Highlights

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக எந்த ஆதாரங்களின் அடிப்படையில்  தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கருத்தை வெளியிட்டுள்ளார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்போது, ''கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபினுக்கு பயிற்சி அளித்தாக தேசிய  புலனாய்வு முகமையும், பாரதிய ஜனதா கட்சியும் உறுதிப்படுத்தப்படாத தகவலை பேசி வருகின்றனர்'' என்றார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குமந்தான் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து கடந்த 23ஆம் தேதி அனுமன் நதியில் ஏற்பட்ட காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இசக்கிமுத்துவின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிவரணம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியை இசக்கிமுத்துவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பாத்தாரிடம் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நிவாரண நிதியை வழங்கினார் . மேலும் இரண்டு குழந்தைகளின் படிப்பிற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''முதல்வர் அறிவித்த நிவாரணத்தொகை இசக்கிமுத்துவின் குடும்பத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பாக இருக்கும் .

உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்

கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நானும் ஆளுநரும் பொதுவான நபர்தான். ஆளுநர் தடயங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம். அதனை தவிர்த்து இருக்கலாம். தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் இருந்தால் ஆளுநர்,  தமிழக அரசிடம் அதனை தெரிவித்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கலாம். 

கோயமுத்தூர் கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு இருப்பதாக ஏற்கனவே ஆளுநர் பாராட்டு தெரிவித்து இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஆலயத்தில் நடந்த வெடி விபத்தில் தொடர்புடைய குற்றவாளி திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் சந்தித்து பேசியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. முபினை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து பின்னர் அனுப்பிவிட்டது'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

4 நாட்களுக்கு பிறகு என்ஐஏயிடம் வழக்கை ஒப்படைத்தது ஏன்.! காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதா..? ஆளுநர் ஆர்.என்.ரவி

click me!